நான் சிறந்த முஸ்லிமாக வாழ என்ன செய்யவேண்டும் ?


 நான்  சிறந்த முஸ்லிமாக வாழ என்ன செய்யவேண்டும் ?


அல்லாஹ்வின் திருப்பெயரால் ...




கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே அமைந்திருக்கும் முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கும் ஆலிம்கள் நிறைந்திருக்கும் ஊர் தான் திட்டுவிளை.


இந்த ஊரில் நியாஸ் ஹோட்டல் மிகவும் பிரபலமானது. சுற்று வட்டாரத்தின் அனைத்து சமூக மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற ஹோட்டல் என்றால் மிகையல்ல.


தரம், ருசி என வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் ஒரு ஹோட்டல். எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டத்தால் கடை நிரம்பி வழிவதை சாலையில் செல்லும் போது பார்க்கலாம்.


சில நாட்களுக்கு முன் இந்த ஹோட்டலுக்கு வெள்ளை சட்டை அணிந்து, காவி வேட்டி கட்டி, கையில் காவிக்கயிறு கட்டி ஒரு காரில் இருந்து நடுத்தர வயதுடைய ஒருவர் இறங்கி வந்தார். பார்த்த உடனே அவர் ஆர்.எஸ்.எஸ் காரர் என்று விளங்கிவிடும்.


வந்தவர் நேராக புரோட்டா மாஸ்டர் சேக் என்பவரை அணுகி என்னுடைய பர்ஸை நான் மற்ந்து வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன். எனக்கு பத்து புரோட்டாவும் சிக்கனும் வேண்டும் என்று கேட்டார். அடுத்த வாரம் இந்த வழியாக வரும் போது பணம் தருகின்றேன் என்கிறார்.


வந்தவர் யார்? எந்த ஊர்? என்ற எந்த விசாரணையையும் செய்யாமல் உள்ளே சென்ற சேக் பத்து புரோட்டாவையும் சிக்கனையும் கொண்டு வந்து கையில் கொடுக்கின்றார்.


சொன்னது போலவே ஒரு வாரம் கழித்து அந்த நபர் வாங்கிய புரோட்டா, சிக்கனுக்கான பணத்தை புரோட்டா மஸ்டர் சேக் அவர்களிடம் கொடுத்து விட்டு மன நெகிழ்வோடு நன்றி தெரிவித்து விட்டு "நான் ஆர்.எஸ்.எஸ் -ன் தீவிர பற்றாளன். முஸ்லிம்களை கண்டாலே எனக்குப் பிடிக்காது. எந்த முஸ்லிமைப் பார்த்தாலும் நான் எதிரியாகத்தான் பார்ப்பேன். இப்படிப்பட்ட என்னை தலைகீழாக மாற்றியது உங்களுடைய செயல் தான்" என்று கூறி விட்டு தொடர்ந்தார்.


உங்களிடம் புரோட்டாவும் சிக்கனும் கடன் வாங்கிய அன்று "நான் என்னுடைய ஊர் குலசேகரத்திலிருந்து மாலை நேரத்தில் என்னுடைய காரில் நாகர்கோவிலுக்கு ஒரு வேளையாக சென்று விட்டு என்னுடைய எஸ்டேட்டுக்கு திரும்பிக்கொ கொண்டிருக்கும் போது என்னுடைய எஸ்டேட்டில் வேலை செய்பவருக்கு சாப்பிட ஏதாவது வாங்கி செல்லலாம் என காரை நிறுத்தி பர்ஸை பார்த்தேன். அப்போது தான் நான் வீட்டிலேயே பர்ஸை மறந்து விட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது.


உடனடியாக ஆர்,எஸ்,எஸ் -ன் பொறுப்பாளர் ஒருவர் நடத்துகிற ஓட்டலுக்கு சென்று என் நிலையைக் கூறி கடன் கேட்டேன். கேட்ட மாத்திரத்திலேயே முகத்தில் அடித்தாற்போல் பேசி கடனெல்லாம் தரமுடியாது என்று கூறிவிட்டார். இத்தனைக்கும் நானும் அவரும் ஒரே கொள்கையில் பயணிப்பவர்கள்.


அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்று பணம் எடுத்து வந்து எங்காவது ஒரு ஹோட்டலில் உணவு வாங்கி எஸ்டேட் வேலையாளுக்கு கொடுக்கலாம் என்று நினைத்து திட்டுவிளை வழியாக சென்றேன். வழியில் தான் உங்கள் கடையைப் பார்த்தேன்.


நம்பிக்கையில்லாமல் தான் உங்கள் ஓட்டலுக்கு வந்து கடன் கேட்டேன். ஆனால், நீங்களோ சற்றும் யோசிக்காமல் எந்த விவரமும் கேட்காமல் எனக்கு உதவி செய்தீர்கள்.


அன்றைய தினம் எனக்கு உறக்கமே வரவில்லை. என்னுள் பல சிந்தனை. நான் உயர்வாக நினைத்த என் கொள்கைக்காரன் எனக்கு உதவி செய்ய மறுக்கின்றான். நான் எதிரியாக நினைத்த ஒரு முஸ்லிம் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்திருக்கின்றார். இனிமேலும், நான் முஸ்லிம்களை எதிரியாக நினைக்கத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்தால் நான் மனிதனே இல்லை என்ற முடிவுடன் தூங்கச் சென்றேன்.


மறுநாள் காலையில் கண்விழித்து எழுந்ததும் முதல் வேலையாக காவிக் கயிறை அறுத்து எறிந்து விட்டேன். இதோ பாருங்கள் என் கையை" என்று நியாஸ் ஹோட்டல் ஷேக்கிடம் நன்றிப்பெருக்குடன் பேசி விடை பெற்றுச் சென்றார். அந்த இந்து சகோதரர்.


கடந்த பதினைந்து நாட்களுக்குள்ளாக நடைபெற்ற நிகழ்வுகள் இது.


முஹம்மது அப்துர் ரஸூல், நவுரின், முட்டாஸ் பார்ஷிம், ஷேக் ஆகியோரின் செயலை, அவர்களோடு தொடர்புடைய இந்நிகழ்வுகளை முஸ்லிமாக நாம் மிக எளிதாக கடந்து விட முடியாது.


முதல் இருவரின் செயல்கள் சக முஸ்லிமோடு நடந்து கொள்ள வேண்டிய முறையையும், இரண்டாமவரின் செயல் ஒரு முஸ்லிம் சக மனிதனோடு நடந்து கொள்ள வேண்டிய பண்பாட்டையும், மூன்றாமவரின் செயல் ஒரு முஸ்லிம் எதிரி மனப்பான்மை கொண்டவரோடு மேற்கொள்ள வேண்டிய பரந்த மனப்பான்மையை, விசாலமான நடத்தையை உணர்த்துவதாய் அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.


இந்த உலகில் நாம் பெரும்பாலும் முஸ்லிம் என்கிற பெயரிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அப்படி வாழ்ந்திடவே நாம் ஆசைப்படுகின்றோம்.


ஆனால், பெயருக்கு முஸ்லிமாக வாழாமல் உண்மை முஸ்லிமாக, முஸ்லிம் என்ற வார்த்தையின் பொருளின் கனத்தையும், பொறுப்பையும் உணர்ந்த முஸ்லிமாக, முன்மாதிரி முஸ்லிமாகா வாழ நாம் ஆசைப்பட வேண்டும். இஸ்லாம் அத்தகைய முஸ்லிமாக வாழுமாறே வலியுறுத்துகின்றது.


மற்றும்



"எவர் நற்செயல் புரிந்த நிலையில், அல்லாஹ்வின் பால் மக்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டு மேலும், நான் முஸ்லிம் (இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவன்) என்று கூறுகின்றாரோ அவரை விட அழகிய வார்த்தையை கூறுபவர் யார் இருக்கின்றார்?". 41:33)


(அல்குர்ஆன்:


ஒரு முஸ்லிமின் சொல்லும், செயலும் எந்தவொரு உயினத்திற்கும், சக மனிதர்களுக்கும் நலம் பயப்பதாய் அமைய வேண்டும் என்று தூண்டுகிற இஸ்லாம், அதே வேளையில் ஒரு முஸ்லிமின் சொல்லும், செயலும் எவ்விதத்திலும் அச்சுறுத்தலாய், ஆபத்தை விளைவிப்பதாய் அமைந்து விடக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்கிறது.


தன்னை உலகின் கடவுளென பிரகடனப்படுத்தி, சொல்லெனாத் துன்பங்களை விளைவித்து வந்த ஃபிர்அவ்னின் முன்பாக மூஸா ஹாரூன் (அலைஹிமஸ்ஸலாம்) ஆகியோரை இறைத்தூதுவர்களாக அனுப்பிய அல்லாஹ் இருவரிடமும் வலியுறுத்தியது இது தான்.


‎‫ذۡهَبَا إِلَى فِرْعَوۡنَ إِنَّهُ طَغَى فَقُولَا لَهُ ولا لَيْنَا لَعَلَخَّهُ يَتَذَيَكَّرُ‬‎


"நீங்கள் இருவரும் ஃபிர்அனிடம் செல்லுங்க நிச்சயமாக, அவன் வரம்பு மீறியவனாக இருக்கின்றான். அவனிடம் நீங்கள் இருவரும் மென்மையாக பேசுங்கள். அதனால், அவன் உங்கள் அறிவுரையை ஏற்கக்கூடும்; அல்லது இறைவனுக்கு அஞ்சக்கூடும்!". 43, 44)


(அல்குர்ஆன்: 2


மாநபி {ஸல்} அவர்களின் தொடர் வெற்றிப் பயணத்திற்கான பிரதான கரணிகளை பட்டியலிடும் அல்லாஹ் முதன்மையாக குறிப்பிடும் இரு காரணிகள் இது தான்.


‎‫بِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ مِنْ حَوْلِكَ ظًا غَلِيظَ الْقَلْبِ‬‎


"நபியே! அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் அம்மக்களிடம் மென்மையாக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும், வன்நெஞ்சம் கொண்டவராகவும் இருந்திருப்பீரேயானால் இவர்களெல்லோரும் உம்மை விட்டு விலகிப்போயிருப்பார்கள்”. (


அல்குர்ஆன்: ௩:௧௫௯)



மாநபி {ஸல்} அவர்களின் தொடர் வெற்றிப் பயணத்திற்கான பிரதான கரணிகளை பட்டியலிடும் அல்லாஹ் முதன்மையாக குறிப்பிடும் இரு


காரணிகள் இது தான்.


‎‫فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُكَ الْقَلْبِ لَانْفَضُ‬‎


"நபியே! அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் அம்மக்களிடம் மென்மையாக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும், வன்நெஞ்சம் கொண்டவராகவும் இருந்திருப்பீரேயானால் இவர்களெல்லோரும் உம்மை விட்டு விலகிப்போயிருப்பார்கள்". (


அல்குர்ஆன்: 3: 159)


ஆகவே, நாம் பயணிக்கிற எல்லாத் துறைகளிலும் பெயர் தாங்கி முஸ்லிம், சராசரி முஸ்லிம் என்கிற நிலையைத் தாண்டி முன்மாதிரி முஸ்லிமாக வாழ ஆசைப்படுவோம்.


1. அச்சுறுத்துவது போன்று நம் சொல்லும், செயலும் அமைந்து விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருப்போம்...


மதீனாவின் ஒரு நாள் காலைப் பொழுது.. ஒரு கிராமவாசி பதற்றத்துடனும், பரபரப்போடும் அண்ணலாரை நோக்கி வந்தார். அப்போது அண்ணலாரும், அலீ (ரலி) அவர்களும் மதீனாவின் வீதியில் நின்று கொண்டிருந்தார்கள்.


மாநபி {ஸல்} அவர்களின் அருகே வந்த அந்த கிராமவாசி "அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன கிராமத்தில் இருந்து வருகின்றேன். இப்போது எங்களின் கிராமத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு மக்களெல்லாம் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கின்றனர்.


நான் அவர்களிடையே இஸ்லாத்தை அறிமுகம் செய்த போது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டீர்களென்றால் உங்கள் உணவுகள் விசாலமடையும் என்று கூறினேன்.


இப்போது, இந்தப் பஞ்சமும் வறட்சியும் அவர்களை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடுமோ என்று நான் அஞ்சுகின்றேன். தாங்கள் ஏதாவது உதவி புரிந்து அம்மக்களை வறட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும்.


அது அவர்களின் வாழ்க்கையில் பேருதவியாக அமையும்" என்று கூறி உதவி வேண்டி நின்றார்.அப்போது, பெருமானார் {ஸல்} அவர்கள் உடனடியாக அவருக்கு உதவிட வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், அப்போது நபிகளாரிடம் ஒன்றும் இல்லை.


சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள். அந்தப் பார்வையில் தெரிந்தவர்கள் எவராவது வந்தால் அவரிடம் இருந்து ஏதாவது கடனாகப் பெற்று உதவிடலாம் என்ற உயர்ந்த நோக்கு தெறித்தது.


சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள். அந்தப் பார்வையில் தெரிந்தவர்கள் எவராவது வந்தால் அவரிடம் இருந்து ஏதாவது கடனாகப் பெற்று உதவிடலாம் என்ற உயர்ந்த நோக்கு தெறித்தது.


அண்ணலாருக்கு சற்றுத் தொலைவில் நின்று கொண்டு, இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ஸைத் இப்னு ஸஅனா என்கிற யூத பாதிரி ஒருவர் நபி {ஸல்} அவர்களின் அருகே வந்தார்.வந்தவர் நபி {ஸல்} அவர்களை நோக்கி "முஹம்மதே! {ஸல்} நான் உதவி செய்கிறேன், ஆனால், அதற்குப் பகரமாக பேரீத்தம்பழ அறுவடை நேரத்தில் இன்னவரின் தோட்டத்தில் விளைகிற பேரீத்தம் பழத்தில் நான் கொடுக்கும் பணத்திற்குச் சமமாக பேரீத்தம் பழங்களை தரவேண்டும்" என்று கூறினார்.


அதற்கு நபி {ஸல்} அவர்கள் "யூத சகோதரா! குறிப்பிட்ட அந்த அறுவடை நேரத்தில், குறிப்பிட்ட இன்னாருடைய தோட்டத்தில் விளைகிற பேரீத்தம் பழங்களை நீர் கொடுக்கும் பணத்திற்கு சமமாக வழங்க நான் சம்மதிக்கிறேன், மேலும், நீர் இன்ன நாளில் (ஒரு நாளைக் குறிப்பிட்டு) வந்து எம்மிடம் அதைப் பெற்றுக் கொள்ளலாம்" என்று கூறினார்கள்.அப்போது, ஸைத் இப்னு ஸஅனா அண்ணலாரிடம் 80 தீனார்களை கடனாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட நபி {ஸல்} அவர்கள் அந்த கிராமவாசியிடம் கொடுத்து, உமது ஊரில் உள்ள எல்லோருக்கும் இதை பிரித்துக் கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள்.


அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும், தோழர்கள் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி - அன்ஹும்) அவர்களும், இன்னும் சில நபித்தோழர்களும் அன்ஸாரித் தோழர் ஒருவரின் ஜனாஸாத் தொழுகைக்காக மஸ்ஜிதுன் நபவீயின் வெளிப்பகுதியிலே வீற்றிருந்தார்கள்.ஜனாஸா கொண்டு வரப்படுகிறது. தூரத்திலே ஸைத் இப்னு ஸஅனாவும் வந்து கொண்டிருக்கிறார்.நபிகளார் சொன்ன காலக்கெடுவுக்கு இன்னமும், இரண்டு அல்லது மூன்று தினங்கள் பாக்கி இருக்கிறது.


ஜனாஸா தொழுது முடித்து நின்று


கொண்டிருந்த அண்ணலாரை நோக்கி பாய்ந்து வந்த


ஸைத் இப்னு ஸஅனா கடுகடுத்த முகத்தோடு,


அண்ணலாரின் கழுத்தில் போட்டிருந்த துண்டைப்


பிடித்து இழுத்தவாறு "முஹம்மதே! {ஸல்} ஏன்


இன்னும் எனது கடனைத் திருப்பித் தரவில்லை?


அப்துல் முத்தலிபின் மக்கள் கடன் வாங்கினால்


திருப்பிக் கொடுக்கமாட்டார்கள், வாக்கு கொடுத்தால்


நிறைவேற்ற மாட்டார்கள் என்பது எனக்கு ஏற்கனவே


தெரியும்!" என்று உரக்க கத்தினார்.


அண்ணலாரிடம் மரியாதைக் குறைவாகவும், தரம் தாழ்ந்தும் நடந்து கொண்ட அந்த யூதரின் செயல் கண்டு கொதித்தெழுந்த உமர் (ரலி) அவர்கள் முகம் சிவந்தவர்களாக "அல்லாஹ்வின் விரோதியே! அல்லாஹ்வின் தூதரிடமா நீ இவ்வாறு பேசுகிறாய்? அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் மாத்திரம் இப்போது இங்கே இல்லை என்று சொன்னால் உனது தலையை நான் கொய்திருப்பேன்" என்று ஆவேசமாகப் பேசினார்கள்.


அதனைக் கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் புன்முருவல் பூத்த முகத்தோடு உமர் (ரலி) அவர்களை நோக்கி "உமரே! நீங்கள் இவ்வாறு பேசியிருக்கக் கூடாது! கடனைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று என்னிடம் தான் தாங்கள் கூறியிருக்க வேண்டும்.மேலும், பணத்தைத் திருப்பிக் கேட்கும் போது கொஞ்சம் மரியாதையுடன் கேளுங்கள் என்று அவரிடம் தாங்கள் கூறியிருக்க வேண்டும்.


ஆனால், உங்கள் பேச்சால் இவரை நீங்கள் பயமுறுத்தி விட்டீர்கள். இவரை அழைத்துச் சென்று நான் வாங்கிய கடனுக்குப் பகரமாக நான் சம்மதித்தது போன்று இன்ன தோடத்து பேரீத்தம் பழங்களை கொடுங்கள். மேலும், அவரை பயமூட்டும் வகையில் பேசியதற்கு பரிகாரமாக 20 மரக்கால்கள் பேரீத்தம் பழங்களை அதிகமாகக் கொடுங்கள்" என்று நபி {ஸல்} அகூறினார்கள்.


அப்போது, உமர் (ரலி) அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு போய் நபி {ஸல்} அவர்கள் சொன்னது போன்றே அவரது கடனையும் திருப்பிச் செலுத்தி, இன்னும் அதிகமாக 20 மரக்கால்கள் பேரீத்தம் பழங்களையும் கொடுத்தார்கள்.அதனைப் பெற்றுக் கொண்ட ஸைத் இப்னு ஸஅனா ஏன் எனக்கு அதிகமாகத் தருகின்றீர்கள்? என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார்.


உம்மை அச்சமூட்டும் வகையில் அமைந்து விட்ட என் பேச்சுக்குப் பரிகாரமாக உமக்கு வழங்குமாறு அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று உமர் (ரலி) அவர்கள் காரணம் கூறினார்கள். (நூல்: உஸ்துல் காபா, அல் இஸாபா ஃபீ தம்யீஜிஸ் ஸஹாபா)


2. வாழும் காலம் முழுவதும் நம்மை குறித்து நெகிழ்ந்து கொண்டே இருக்கும் படியான செயலை செய்ய வேண்டும்...


செயலுக்கு தான் மதிப்பு ! பேச்சுக்கு அல்ல . முன்மாதிரியாக வாழ்ந்தால்தான் , மற்றவர்களுக்கு ஈர்ப்பு வரும் .  நம்மிடத்தில் செயலுக்குரிய பிரதிபலிப்பு இல்லை , அல்லாஹ் பாதுகாத்தவரைத் தவிர . நாம் ஒரு சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தால் , மற்றவர்களுக்கு இஸ்லாத்தின் மீது பற்றும் , ஈர்ப்பும் வரும். அல்லாஹ் நம் அனைவரையும் சிறந்த முஸ்லிமாக வாழச் செய்வானாக ..ஆமீன் 

நன்றி : வெளிமேடை வலைத்தளம்.

கருத்துகள்