தொலைகாட்சி தொல்லைக்காட்சியாகி விட்டது!

 


இக்காலத்தில் தொலைக் காட்சி இல்லாத வீடுகளே இல்லை என்பது உண்மையான விஷயம். அதில் எண்ணங்களை கெடுக்கும் பல காட்சிகள் , ஆபாசப்படங்கள் , கற்பனை கதைகள் மற்றும் பல சொல்லில் அடங்காத அளவு உள்ளன . இதனால் வணக்கங்கள் நல்ல காரியங்கள் செய்வதற்கு தடையாகி பொன்னான நேரங்களை வீணாக்கி வீட்டில் இருந்து கொண்டே கெட்டுப் போவது சர்வசாதாரணமாகி தொலைகாட்சி தொல்லைக்காட்சியாகி விட்டது!


இன்று கெட்டுபோவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. பல தீய பழக்கங்கள் நம்மிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்து விட்டது! ஆனால், அவைகள் சிலருக்கு கெட்ட பழக்கங்கள் என்பது கூட அறியாமல் நல்லது என்று எண்ணி கடைப்பிடித்து வருகிறார்கள்! சிலர் அவைகளை விடமுடியாமல் தவிக்கிறார்கள்! 


ஆரம்பத்தில் எல்லாமே எளிதாக இருக்கும் போக போக எல்லாம் நம் வாழ்க்கையில் எளிதாகி விடும்  ! பாவம் நன்மை போல் ஷைத்தான் காட்டுவான்! ''இதெல்லாம் ஒரு தவறா என்று எண்ணுமளவுக்கு மனசு ஆகிவிடும்! 


பிறந்த நாளை ஒரு விழாவாக கொண்டாடும் மக்கள்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! ''ஒரு வயது குழந்தை 'எனக்கு பிறந்த நாள் கொண்டாட ஆசையாக இருக்கு அம்மா என்று கூறியதை நாம் யாரவது கேட்டிருக்கோமா ? எல்லாத்துக்கு காரணம் பெற்றோர்கள் தான் ! பிறந்தநாள் கொண்டாடினால் என்ன என்று சிலர் கேட்கிறார்கள்! அவர்களின் அறியாமையை தான் இங்கே சுட்டிக்காட்ட முடியும்! இந்த பழக்கம் இன்னும் அதிகமாகிக்கொண்டுதான் போகும் ஒழிய ஒருபோதும் குறைய வாய்ப்பு இல்லை . (இன்ஷாஅல்லாஹ் ) சிலர் இதிலிருந்து விடுபட்டு மாறலாம். அல்லாஹ் மிக்க அறிந்தவன்.


இன்று நம்மை ஆட்டிப்படைக்கும் இரண்டு விடயங்கள் , ஒன்று: தொலைகாட்சி , இரண்டாவது: கைத்தொலைபேசி .  சிலர் ஜும்மாவுக்கு தொழுகைக்கு சென்றாலும் அங்கேயே பார்க்கும் சில மக்கள்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த அச்ச உணர்வு இல்லை  என்பதுதான் எதார்த்த உண்மை! 


இன்று பொழுதுபோக்கு விடயங்கள்  நம் வாழ்க்கையில் கலந்துவிட்டது! 

போனது போகட்டும் மிஞ்சிய காலங்களில் நாம் இன்ஷாஅல்லாஹ் நம் வாழ்க்கையை நல்லமுறையில்  அமைத்துக்கொள்ள வேண்டும்! 


சத்திய பாதை இஸ்லாம் .

கருத்துகள்