அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

சனி, 24 டிசம்பர், 2016

புறம் பேசுவோருக்கு என்ன தண்டனை?

புறம் பேசுவோருக்கு என்ன தண்டனை?
பிறரைப் பற்றி புறம் பேசுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான். இந்தப் பாவத்தைச் செய்பவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது.

குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.
(அல்குர்ஆன் 104:1-9)

செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

கடமையான குளிப்பு

குளித்தல் கடமையான குளிப்பு 
248. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்" ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
249. 'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

விலக்கப்பட்ட புறமும் இழக்கப்படும் நன்மைகளும்

பெரும்பாலும் நான்கு பேர் ஒரு சபையில் ஒன்று கூடினால் அடுத்தவரின் குற்றங்குறைகளைப் பற்றிப் பேசாமல் அந்தச் சபையை விட்டும்விலகிச்செல்வதிலலை.தனது சகோதர முஸ்லிமின் குறைகளை அம்பலப்படுத்தி சந்திக்கிழுப்பது அச்சபைக்கு சக்கரைப்பொங்கலாக மாறிவிடும். பொதுவாக மாற்றாரின் விவகாரம் என்றால் அது தேனை விட தித்திப்பாகி விடுகின்றது.தேனாவது கொஞ்ச நேரத்தில் திகட்டி விடும்.ஆனால் இது திகட்டாது. இதனால் தான் புறம் பேசுபவரும் புறம் கேட்பவரும் தேன் அருந்துவதைப் போன்று அடுத்தவரின் குறைகளை ரசித்து ருசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக புறம் பேசப்படுபவர் பகைவராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தால் அதை சொல்ல வேண்டியதில்லை.தலையிலிருந்து பெறு விரல் வரை பேசி முடிப்பார்கள்.சமூகத்தில் உள்ள அத்தனை மட்டத்தாரும் இதில் புகுந்துவிளையாடுகின்றனர்.நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் இந்த நோய் பரவியுள்ளது

மார்க்கத்தில் பிடிப்பும் பற்றும் உள்ள நல்லடியார்களைக்கூட ஷைத்தான் தனது ஆதிக்கத்தை செலுத்தி இந்த பாவத்தில் விழச்செய்துள்ளான் என்றால் இது எவ்வளவு பெரிய தீமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

பொருளாதாரத்தில் ஹராம் ஹலாலைப் பேணி நேர்மையாக நடப்பவர்கள் கற்பொழுக்கத்தில் கண்னும் கருத்துமாய் இருப்பவர்கள் தொழுகை நோன்பு திக்ர் போன்ற இறைவணக்கங்களில் ஆர்வம்முள்ளவர்கள் கூட புறம் எனும் பாவத்தில் இலகுவாக விழுந்து விடுகின்றனர் என்றால் ஷைத்தான் இந்த விடயத்தில் இலகுவாக நல்லவர்களையும் கெடுத்து விடுகின்றான் என்பது தான் இதன் அர்த்தம்.

எனவேதான்புறம் குறித்து சில விடயங்களை  உங்களோடு பகிர்ந்து கொள்வது எழுதும் எனக்கும் வாசிக்கும் உங்களுக்கும் ஒரு பயனுள்ள  உபதேசமாய் இருக்கும் என நினைக்கின்றேன்

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

தௌஹீத் vs சுன்னத் ஜமாஅத்

பிரித்துப் பார்க்காதீர்கள் எப்பொழுதும் இணைத்துப் பாருங்கள் !தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள்.

அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு 'தவ்ஹீத்' என்று பெயர்.

அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்

'அஹ்லுஸ் ஸுன்னத் என்பதற்கு நபி வழியென்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு அவ்வழியை பின்பற்றுவர்கள் என்றும் பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றும் யாவரும் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் ஆவர்

சனி, 17 ஜனவரி, 2015

கனிவாக நடந்துக் கொள்வோம்!    மௌலவி M.T.M.ஹிஷாம் மதனீ

ஒரு முறை "ஸூப்யானுஸ் ஸவ்ரி" ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனது தோழர்களை
நோக்கி: "கனிவு என்றால் என்ன?" என்று வினவினார்கள். அதற்கு தோழர்கள்:
"அபூ முஹம்மதே நீங்கள் கூறுங்கள் எனக் கூறினார்கள்." அப்போது இமாமவர்கள்:
"அந்தந்த விடயங்களை அதனதன் இடத்தில் மேற்கொள்வதாகும்" என
பதிலளித்துவிட்டு, அதனை பின்வருமாறு விளக்கினார்கள்.

அல்லாஹ்வின் நேசம் பெற்றவரும், நேசம் பெறாதவரும்2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: "அது
(ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும்
விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள்
தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி
அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ்
நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்."

3:31. (நபியே!) நீர் கூறும்: "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால்,
என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை
உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை
உடையவனாகவும் இருக்கின்றான்.

மனம் விட்டுப் பேசுங்கள்மனம் விட்டுப் பேசுங்கள்!
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு
மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன.


மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும்,சந்தேகங்களும்
நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய
ஆரம்பித்து விடுகின்றன.

பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.
என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து
கொள்கிறார்கள்.மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக
வேண்டியதாகி விடுகின்றது.அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே
மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள்.